ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று..!

share on:
Classic

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினத்தையொட்டி பிரிட்டன் தூதரக அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் எந்த அறிவிப்பும் இன்றி, பெண்கள், சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 379 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டீஷ் அரசு அறிவித்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இதன் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பஞ்சாப் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரிட்டன்  தூதர் டோமினிக் மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர்சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவும் மரியாதை செலுத்தினர்.

 

News Counter: 
100
Loading...

aravind