எழுவர் விடுதலையில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது : தலைவர்கள் குற்றச்சாட்டு..

share on:
Classic

எழுவர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக பேரரறிவாளனின் தாயார் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மும்பை வெடிகுண்டு தாக்குதல்லில் தொடர்புடைய சஞ்சய் தத்தை விடுதலை செய்த அரசு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வது ஏன் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணமான சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறிய அவர் 28 ஆண்டுகளாகியும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிகாட்டிய அவர், சட்டம் அனைவருக்கும் சமம் இல்லை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.

ஏழு தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்ற பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாலர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர், மாநில அரசும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

திமுக ஆட்சிக்கு வந்த உடன் 7 தமிழர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறிய ஆர்.எஸ். பாரதி, இன்னும் ஒரு சில நாட்களில் இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் உறுதியளித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya