தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

share on:
Classic

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய பொட்டிபுரத்தில், உள்ள அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு கடந்த 2010 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. இங்கு நியூட்ரினோ ஆய்வகம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் தன்மை பாதிக்கப்படும் எனவும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அணுசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்தர்சிங் எழுத்து மூலம் இந்த பதிலை அளித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்திற்காக மலையை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடைந்து ஆய்வு நடக்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த ஆய்வு மையம் அமைப்பதால், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. எனினும், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind