தமிழகத்தின் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்..!

share on:
Classic

தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட 32 இடங்களில் ஹைட்ரபோ கார்பன் எடுக்கும் பணியை தொடங்குவதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தின் 23 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணியை தொடங்க மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனங்களுக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக பெட்ரோலிய அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல், இந்தியாவின் எரிசக்தி தேவை விரைவில் சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தாமதப்படுத்தாமல் உடனடியாக பணியை தொடங்கும் படி தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind