குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற உத்தரவு

share on:
Classic

ஜம்மு காஷ்மீரில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகருக்கு சென்ற அவரை, விமான நிலையத்திலேயே தடுத்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அப்போது பேசிய ஆசாத், காஷ்மீர் மக்களுடன் அஜய்தோவல் சகஜமாக பேசுவது போன்று வெளியான வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். 

பணம் கொடுத்து யாரை வேண்டுமானாலும் நடிக்க வைக்கலாம் என தெரிவித்துள்ள அவர், இது மத்திய அரசின் போலி விளையாட்டு என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind