இழப்பீடு சட்டத்தில் மாற்றம் வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

share on:
Classic

விபத்தில் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஏதுவாக தொழிலாளர் இழப்பீட்டு சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி வழுதாவூரில் உள்ள இந்துஸ்தான் தேசிய கண்ணாடி தொழிற்சாலையில், பணியாற்றி வந்த செந்தில் என்ற தொழிலாளிக்கு 2000-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் இடது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பழுதான சிறுநீரகம் அகற்றப்பட்ட நிலையில், மன உளைச்சல் மற்றும் வலிக்கு நிவாரணமாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டுமென தொழிலாளர் காப்பீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தொழிலாளர் காப்பீட்டு கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது, செந்திலுக்கு ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டாலும் மற்றொறு சிறுநீரகம் இயல்பாக செயல்படுவதால் இழப்பீடு வழங்க முடியாது என தொழிலாளர் காப்பீட்டு கழகம் வாதிட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், 2 சிறுநீரகங்களில் ஒன்று மட்டுமே செயலாற்றுவதால், பாதிக்கப்பட்ட நபரால் இயல்பாக பணியாற்ற முடியாது எனக்கூறிய அவர், இழப்பீட்டுத் தொகையை ரூ. 2.15 லட்சமாக அதிகரித்து வழங்க உத்தரவிட்டார்.

மேலும், விபத்தில் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் இழப்பீடு பெறும் வகையில் 1948-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலாளர் அரசு காப்பீட்டு சட்டத்திலும், 1923-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலாளர்கள் இழப்பீடு சட்டத்திலும் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரும் என எதிப்பார்ப்பதாக கருத்து தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan