மத்திய அரசின் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

share on:
Classic

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களை தொடர்ந்து மத்திய அரசின் நிதி மசோதா மக்களவையில் நிறைவேறியது. 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக நாடாளுமன்றம் நேற்று கூடியது. காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து 12 மணி வரை மக்களவையும், 2 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பின்னர் மக்களவை 12 மணிக்கு கூடியபோது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தம்பிதுரை பாஜக தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக குற்றம் சாட்டினார். பட்ஜெட் மீதான விவாதங்களை தொடர்ந்து மத்திய அரசின் நிதி மசோதா மக்களவையில் நிறைவேறியது.

News Counter: 
100
Loading...

aravind