புயல் பாதித்த பகுதிகளில் 3-வது நாளாக மத்திய குழுவினர் இன்று ஆய்வு

share on:
Classic

தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. அப்பகுதியில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட டேனியல் ரிச்சர்ட் தலமையிலான மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

முதல் நாள் புதுக்கோட்டையில் ஆய்வு செய்தனர். பின்னர், தஞ்சை சென்ற அவர்கள் ஒரத்தநாடு பகுதியில் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி மக்களிடம் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth