2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

share on:
Classic

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடக்கு கர்நாடகம் முதல் கன்னியாக்குமரி வரை காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

கன்னியாகுமரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே, நெல்லை, கொடைக்கானல், நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பொழிந்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

 

News Counter: 
100
Loading...

aravind