அண்ணா அறிவாலயம் வருகிறார் சந்திரபாபு நாயுடு..!

share on:
Classic

வாக்குப் பதிவு இயந்திங்கள் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று திமுக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கடந்த 11-ஆம் தேதி ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருந்ததாக தேர்தல் ஆணையத்திடம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகார் அளித்திருந்தார். இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாகவும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக தமிழகம் வர உள்ள அவர், அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தி வரும் நிலையில், சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan