தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சந்திரபாபு நாயுடு புகார்..!

share on:
Classic

ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் அளித்துள்ளார்.

ஆந்திராவில் கடந்த 11-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. சுமார் 400 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், மிகவும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், சில பகுதிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து, புகார் மனு அளித்தார். அதில், ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காதது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தலின்போது கலவரத்தில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan