உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சந்திரபாபு நாயுடு..!!

share on:
Classic

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, டெல்லியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைந்தது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், டெல்லியில் இன்று போராட்டம் தொடரப்பட்டது.  சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். அவரது உண்ணாவிரதத்துக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை  அவர் நிறைவு செய்தார். அப்போது, வாக்குறுதி அளித்தபடி மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

News Counter: 
100
Loading...

vinoth