ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார் சந்திரபாபு நாயுடு

share on:
Classic

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, டெல்லியில் அவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தார். அதன்படி, ஆந்திர பவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறார்.

News Counter: 
100
Loading...

aravind