ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

Classic

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, டெல்லியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 12 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், டெல்லியில் இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். அதன்படி, டெல்லியில் உள்ள ஆந்திரபவனில் இன்று காலை 8 மணிக்கு தனது உண்ணாவிரப் போராட்டத்தை அவர் தொடங்கினார்.  இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்பிக்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று சந்திரபாபு நாயுடு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஆந்திரபவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்தித்து சந்திரபாபுநாயுடு மனு அளிக்கவுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind