பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல் - சந்திரபாபு நாயுடு ஆலோசனை..!

share on:
Classic

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினர். 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் தேசிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது என கூறப்பட்டு வரும் நிலையில், மாநில கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று, அவரது இல்லத்தில் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். 

இதைத் தொடர்ந்து மூத்த தலைவர்கள் சரத் பவார், சரத் யாதவ் ஆகியோரைச் சந்திக்க இருப்பதாகவும், பின்னர் லக்னோ சென்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளின் தலைவர்களை தெலுங்கானா முதலமைச்சர் சந்திராசேகர் ராவ் சந்தித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் சந்திரபாபு நாயுடு நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind