அன்னிய செலாவணி மோசடி வழக்கு : சசிகலா மீது எப்போது குற்றச்சாட்டு பதிவு..?

share on:
Classic

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீதான குற்றச்சாட்டு பதிவு வரும் 28 ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கப் பிரிவு பதிவு செய்தது. இதுதொடர்பாக 5 வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. 

சசிகலா மீதான 4 வழக்குகளில், 2 வழக்கில் ஏற்கனவே குற்றச்சாட்டு பதிவு முடிவுற்ற நிலையில், எழும்பூர் மாஜிஸ்திரேட் நடுவர் மன்ற நீதிபதி மலர்மதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அடுத்த விசாரணை 28ம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் 2 வழக்குகளில்  குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார். சிறையில் இருந்தவாறு வீடியோ காண்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவுக்கு சசிகலா ஆஜராக வேண்டும்  எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

News Counter: 
100
Loading...

aravind