’வணிகர்களை துன்புறுத்தாதீர்கள்’ - பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் நீதிமன்றம் அறிவுறுத்தல்

share on:
Classic

ஒருமுறை மட்டுமே உபயோகிக்க பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் 50 விற்பனையாளர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்வதாகவும் குற்றம்சாட்டினர். பிளாஸ்டிக் தடை அரசாணையை முறையாகப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய உயர் நீதிமன்றம் பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்த வேண்டாம் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியது. 

தடை செய்யப்பட்ட 14 பொருட்களை தவிர வேறு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind