சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க அனுமதி..!

share on:
சேலம், 8 வழிச்சாலை, சென்னை உயர்நீதிமன்றம், Salem, Madras Highcourt
Classic

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று நேற்று முன்தினம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன், சிறப்பு பரிசாக 1000 ரூபாய் வழங்க அனுமதி கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,  ஓட்டுக்காக மட்டுமே பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 வழங்கப்படுவதாக பொதுமக்கள் எண்ணுகிறார்கள் என்றும், இலவச திட்டங்களை செயல்படுத்தும் போது பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். 

ஜன் தன் திட்டத்தின் கீழ் அனைவரும் வங்கிக்கணக்குகள் உள்ள நிலையில், பொங்கல் பரிசை பெற மக்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காக்க வேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind