“தபால் வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்”

share on:
Classic

தபால் வாக்குகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்ப படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக சாந்தகுமார் என்ற அரசு பள்ளி ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் முக்கியமானது என்று தெரிவித்தனர்.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எத்தனை தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது என்பது குறித்தும், எத்தனை தபால் ஓட்டுகள் பதிவானது உள்ளிட்ட விவரங்களை வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan