பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு

share on:
Classic

முன்னாள் அமைச்சர் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 1998ம் ஆண்டு காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 10,000 அபராதம் விதித்தது. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இன்று நீதிபதி பார்த்திபன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக அவர் வரும் 28ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind