கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை..!

share on:
Classic

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசியதாக, தி.மு.க மகளிர் அணி பொதுச்செயலாளர் கனிமொழி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கனிமொழி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், கனிமொழி நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதி ஆணையிட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan