பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரிய வழக்கு : தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படி மனுதாரருக்கு உத்தரவு..!

share on:
Classic

பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படி மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலன்று அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்த ஒரு கும்பல், தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தேர்தல் நாளில் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவத்தால், தான் தேர்தலில் வாக்களிக்க முடிவில்லை எனக் கூறி விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எனவே, பொன்பரப்பில் மறுதேர்தல் வாக்க்குப்பதிவு நடத்த வலியுறுத்தப்பட்ட நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இது தொடர்பான ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan