பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை நிர்பந்திக்க கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு

share on:
Classic

ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை வற்புறுத்த கூடாது என பள்ளி நிர்வாகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம், பாட புத்தகங்களுக்கு ரூ. 5,000, சீருடைகள், காலணிகள், புத்தக பை, மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு ரூ. 5,000 செலுத்தக்கூறி சுற்றறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த ரூ.450 விலை கொண்ட புத்தகங்களுக்கு பதிலாக, ரூ. 5,000 மதிப்புடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால், நடுத்தர பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை விற்கலாம் என்றும், பிற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என உத்தரவிட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan