சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்த வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

share on:
Classic

சென்னையில் 2 இடங்களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகளில் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து வருவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெருகிவிட்ட நிலையில், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு, இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஆகியோர் வரும் திங்களன்று அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan