சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி சக கைதிகளுக்கு யோகா பயிற்சியளிக்க அனுமதி..!

share on:
Classic

சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள ஒருவர் சக கைதிகளுக்கு யோகா பயிற்சியளிக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள இரணியன் அல்லி கிராமத்தை சேர்ந்தவர் அமுதா. இவர் சிறையில் உள்ள தனது மகனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரியது தொடர்பாக சிறை அதிகாரிகள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அப்போது, நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகு மனுதாரரின் மகனை சிறை கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க சிறை அதிகாரிகள் தடை செய்திருப்பது  தெரிய வந்துள்ளது என தெரிவித்தனர். 

மேலும், அவர் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிப்பதைத் தடுத்தால் இழப்பு கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்கும்தான் என்றும் அதனால், சிறையில் உள்ள மனுதாரரின் மகனை கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அதை தடுத்தால் நீதிமன்ற அவமதிப்பாகும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு ஒத்தி வைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind