நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்கள் யார்..? விவரங்களை தாக்கல் செய்ய ஆணை..!

share on:
Classic

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவது தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு, சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படவில்லை என எந்த அடிப்படையில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது என கேள்வி எழுப்பினர். இது தொடர்பான விவரங்களை காவல்துறை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் நீர் எடுத்து செல்வதற்கான வாகன அனுமதி பெற்ற விவரங்களை மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind