7 பேர் விடுதலை வழக்கு : எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு

share on:
Classic

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. 

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்தது. ஆனால், இதற்கு எந்த பதிலும் இல்லை எனக்கூறி நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுனருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவையின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது என வாதிட்டார். 

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், 7 பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை அது ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்டு, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind