நீர் திருட்டைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன..? தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி..!

share on:
Classic

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் திருட்டை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் நிலத்தடி நீர் தனியாரால் திருடப்படுவதாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் சூமோட்டா வழக்காக எடுத்துக்கொண்டுள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், எதிர்பாராத விதமாக தண்ணீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நிலத்தடி நீர் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து வணிக ரீதியாக விற்பனை செய்பவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்த தப்பித்துகொள்வதாகவும் தெரிவித்தார். 

சட்டவிரோத நிலத்தடி நீர் விற்பனையை அரசு தடுக்காதது அரசியலமைப்புக்கு விரோதமானது மட்டுமல்ல, அரசியலமைப்பு அடிப்படைவசதிகளை அரசு செய்ய தவறியுள்ளதாக கூறினார். மேலும், நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? - ஏரிகள், விவசாய நிலங்கள், நீர் ஆதாரங்களிலிருந்து நிலத்தடி நீரை எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என சரமாரி கேள்விகளை நீதிபதி எழுப்பினார். வரும் திங்கட்கிழமை தமிழக அரசு உரிய பதிலளிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind