தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : தற்காலிக குழு நியமனத்துக்கு தடை விதிக்க மறுப்பு

share on:
Classic

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழு நியமனத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சேகர், தனக்கு உதவியாக இயக்குநர் பாரதிராஜா,  உள்பட 9 பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். இந்த குழு நியமனத்துக்கு தடை விதிக்க கோரி  தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன்  வழக்கு தொடரந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஏற்கெனவே தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து, நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரமில்லை என்று மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.  இதை எதிர்த்து வாதாடிய அரசு தரப்பு, தனி அதிகாரியின் உதவிக்காக தான் தற்காலிக குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு சங்க நிர்வாகத்தில் தலையிடாது என்றும் கூறியது. இதை ஏற்ற நீதிபதி, தற்காலிக குழு நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்து, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind