சென்னை மெட்ரோ ஸ்டேசன்களில் சொகுசு கார் சேவை தொடக்கம்

share on:
Classic

இணைப்பு வாகன சேவையின் ஒரு அங்கமாக சொகுசு கார்கள் சேவையை தொடங்கியது சென்னை மெட்ரோ. 

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக சூம் கார் ( ZoomCar ) நிறுவனத்தின் பங்களிப்புடன் சொகுசு கார் சேவையை தொடங்கியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிலையம். 

இதன் மூலம் பயணிகள் ரூ 5000 முன்பணம் செலுத்தி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சொகுசு கார்களை ( Self Driving )  எடுத்துக்கொண்டு அருகில் உள்ள இடங்களுக்கு சென்று வரலாம். இதன் முதற்கட்டமாக 15 கார்களை கொண்டு இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. போர்ட் ஃபிகோ ( Ford Figo )
முதல் டாடா ஹெக்சா ( Tata Hexa ) வரையிலான சொகுசு கார்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

இச்சேவையை பெற பயணிகள் www.zoomcar.com என்ற இணையதளத்திலோ அல்லது சூம் கார் ( Zoomcar) செயலியிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம்
இந்த கார்கள் அனைத்தும் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அனைத்து கார்களிலும் GPS பொருத்தப்பட்டுள்ளது. 

இச்சேவைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பிற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. ஏற்கனவே , இணைப்பு வாகன சேவையில் வாடகை கார், ஷேர் ஆட்டோ, வேன் உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ள நிலையில், புதியதாக சொகுசு கார்கள் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

sankaravadivu