சென்னை : வாக்கு எண்ணிக்கையின்போது 5,000 போலீசார் பாதுகாப்பு..!

share on:
Classic

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்படுள்ளது. இதனிடையே, நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், 3 வாக்கு எண்ணும் மையங்கள் உட்பட முக்கிய இடங்களில் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan