8 வழிச்சாலை திட்டம் : இன்று தீர்ப்பு..!

share on:
Classic

தமிழக அரசு அறிவித்த 8 வழிச்சாலை திட்டத்தின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் :
20180-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. இத்திட்டம் மூலம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலம் அமைக்க சுமார் 1,900 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக வழக்கு :
சென்னை- சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 5 மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக்கோரியும் 5 மாவட்ட விவசாயிகள், தருமபுரி எம்.பி. அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு 6 மாதங்களுக்கும் மேலாக விசாரித்து வந்தது.

மத்திய அரசு வாதம் :
இந்த திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும், திட்டப்பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தனது வாதங்களை முன்வைத்தது. அதேபோல, மத்திய சுற்றுசுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என்றும் மத்திய அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.

தமிழக அரசுக்கு கண்டனம் :
இந்த வழக்கு விசாரணையின் போது, 8 வழிச்சாலை திட்டத்திற்காக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது குறித்தும், பதிலுக்கு மரங்கள் நடப்பட்டது குறித்தும் உரிய பதிலளிக்காததால் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக 1,200 மரங்கள் நடப்படும் என தமிழக அரசு பதிலளித்தது.

இதற்கிடையில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி - எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் டிசம்பர் 14-ஆம் தேதி முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan