எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் - நிதின் கட்கரி

share on:
Classic

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பிரச்னைகளைத் தீர்க்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் “எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் சேலத்துக்கு முக்கியமானது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு அதிக விலை கொடுக்கப்படுகிறது” எனவும், “எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டம் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் செயல்படுத்தப்படும்” என்றும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan