விஜய் பேனர் கிழிப்பு, கட் அவுட் உடைப்பு... அதிமுக - சர்கார்

share on:
Classic

சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி,  சென்னை காசி தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இத்திரைப்படத்தில் அரசு அளித்த இலவசப் பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு, அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் நலத்திட்டங்களை அவதூறாக சித்தரிக்கும் இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி, தமிழகத்தின் பல இடங்களில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கை முற்றுகையிட்டு அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள காசி தியேட்டரில்  சர்கார் படம்  திரையிட்டு உள்ளதால், அதிமுகவினர் திரையரங்கை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் சர்கார் படத்திற்கு ரசிகர்கள் வைத்திருந்த விஜய் பேனரை உடைத்தும், கட்அவுட்டை உடைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

News Counter: 
100
Loading...

vijay