சென்னை : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!

share on:
Classic

சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

மத்திய கைலாஷ் சந்திப்பு சாலையில் நள்ளிரவு 12.30 அளவில் பள்ளம் ஏற்பட்டதாக தெரிகிறது. சுமார் 5 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட இந்த பள்ளத்தைச் சுற்றி போக்குவரத்து போலீசார் பாதுகாப்பிற்காக பேரிகார்டுகளை அமைத்துள்ளனர். இருப்பினும் நேற்றிரவு முதலே பள்ளத்தை சரி எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த மே மாதம் இதே பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. அப்போது தற்காலிகமாக சிமெண்ட் கலவையை வைத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ததாகவும், அதனால் அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

News Counter: 
100
Loading...

Ragavan