சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்.. 4வது முறையாக மகுடம் சூடப்போவது யார்..?

share on:
Classic

12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் கோப்பைக்கான பலப்பரீட்சையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இண்டியன்ஸ் அணி மோதுகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில், இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ப்ளே ஆஃப் முதல் தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக மும்பை இண்டியன்ஸ் அணி இறுதிப் போடிக்குள் நுழைந்தது. சென்னை அணியோ, இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த தொடரில் மட்டும் சென்னை அணி மூன்று முறை மும்பை அணியுடன் மோதியது. இந்த மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே அபார வெற்றிப் பெற்றது. இதையடுத்து இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை அணி களமிறங்க உள்ளது. அதேசமயம், ஹாட்ரிக் தோல்விக்கு பழிதீர்த்து சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும்.

News Counter: 
100
Loading...

vinoth