சென்னையின் இரண்டாவது விமான நிலைய பணிகளை துரிதப் படுத்த வேண்டும் - ராமதாஸ்

share on:
Classic

சென்னையின் இரண்டாவது விமான நிலைய பணிகளை விரைவுப் படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கானத் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது. சென்னையுடன் திட்டமிடப்பட்ட கொச்சி, ஐதராபாத், பெங்களூர் ஆகிய விமான நிலையங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன. ஆனால், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பதால் அதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கட்டுமான மற்றும் தொழில்நுட்பப் பணிகளையும் முடித்து சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan