சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதல் ரத்து - ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சத்தீஸ்கர் அரசு அதிரடி

Classic

சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை ரத்து செய்வதாக சத்தீஸ்கர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆந்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப்பட்ட பொது ஒப்புதலை வாபஸ் பெறுவதாக சத்தீஸ்கர் மாநிலம் அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை சத்தீஸ்கர் உள்துறை செயலாளர் மத்திய அரசுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

அதில், டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் சிபிஐக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மற்றும் சத்தீஸ்கரில் செயல்படுவதற்கான பொது ஒப்புதல் உத்தரவு ஆகியவற்றை வாபஸ் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சத்தீஸ்கர் மாநில அரசிடம் அனுமதி பெறாமல் சிபிஐ அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth