சிதம்பரம் : முதலை இழுத்துச் சென்றவரின் உடல் மீட்பு..!

share on:
Classic

சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை இழுத்துச் சென்ற கூலித்தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

பெரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி, தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, நீருக்குள் இருந்த முதலை, கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயமணியை தாக்கி இழுத்துச் சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் உடனடியாக விரைந்து சென்று ஆற்றுக்குள் நீண்டநேரம் தேடினர். ஆனால் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியாததால் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். மேலும், தகவல் கொடுத்து நீண்டநேரமாகியும் தீயணைப்புத்துறையினர் வரவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து ஆற்றில் தீவிர தேடல் வேட்டையில் இறங்கிய கிராம மக்கள், ஜெயமணி உடலை மீட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த அண்ணாமலைநகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan