சிதம்பரம் : ஆற்றில் குளிக்கச் சென்றவரை கடித்து இழுத்து சென்ற முதலை..!

share on:
Classic

சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளியை முதலை கடித்து இழுத்து சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி, தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, நீருக்குள் இருந்த முதலை, கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயமணியை தாக்கி இழுத்துச் சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் உடனடியாக விரைந்து சென்று ஆற்றுக்குள் நீண்டநேரம் தேடினர். ஆனால், ஜெயமணியை கண்டுபிடிக்க முடியாததால் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். மேலும், தகவல் கொடுத்து நீண்டநேரமாகியும் தீயணைப்புத்துறையினர் வரவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரில் உள்ள முதலைகளை அப்புறப்படுத்தி, தனி இடம் அமைத்து முதலைகளை வளர்க்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan