தேர்தல் ஆணையர்களிடையே கருத்து முரண்பாடுகள் இயல்புதான், சர்ச்சையாக்க வேண்டாம் - சுனில் அரோரா

share on:
Classic

தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து முரண் ஏற்படுவது இயல்புதான் என்றும் அதை, சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா மீதான, தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் தொடர்பான விசாரணையின் போது, தனது கருத்து ஏற்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதியுள்ளார். இனி தேர்தல் ஆணையத்தின் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது சர்ச்சையானதை அடுத்து, அதற்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒருவரைப் போல் மற்றவர்களும் சிந்திப்பார்கள் என எதிர்பார்க்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan