கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..!!

share on:
Classic

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, ஆளும் மதச் சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.வின் மகனிடம் குதிரை பேரம் பேசிய ஆடியோ பதிவை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோ பதிவில், பாஜக தலைவர் எடியூரப்பா, ஆளும் மதச் சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ. நாகன கவுடா கண்ட்குரின் மகன் சரணாவிடம் பேசியுள்ளார். அதில், சரணாவின் தந்தை பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் 25 லட்சம் ரூபாயும் அமைச்சர் பதவியும் தருவதாகக் எடியூரப்பா கூறுகிறார். இந்த ஆடியோ பதிவு குறித்து முதலமைச்சர் குமாரசாமி கூறுகையில்,  பாஜக தங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை, ஆனால், அவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். மேலும், பாஜகவின் குதிரை பேரம் குறித்து சபாநாயகருக்கு புகார் அளிக்கப்போவதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வின் மகனிடம் குதிரை பேரம் பேசியதாக வெளியான ஆடியோவுக்கு எடியூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ முற்றிலும் போலியானது என்றும் அவர் தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

vinoth