சம்மருக்கு 'ஷிபான்' புடவை தான் பெஸ்ட் !!!

Classic

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், கொளுத்தும் வெயிலில் இருந்து பெண்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள குளுகுளு ’ஷிபான்’ சேலைகள் தான் பெஸ்ட்.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் படுத்தி எடுக்கிறது. இந்த வெயிலில் பெண்களின் நிலைமையோ படுமோசம். அதிக எடையுள்ள சேலைகளை அணிவதன் மூலம் பெரும் சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அதுவும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கட்டாயம் பட்டு சேலைகளை உடுத்தினால் தான் அழகு என்று நம் சமுதாயம் இன்னும் நினைப்பதால் அதிக எடையுள்ள பட்டு புடவைகளை கட்டிக்கொண்டு வியர்த்து விறுவிறுத்து போகின்றனர் பெண்கள். இந்த சங்கடங்களில் இருந்து விடுபடவே, கடவுள் கொடுத்த வரமாய் கிடைத்துள்ளன ’ஷிபான்’ புடவைகள். மிகவும் எடை குறைந்த இந்த புடவைகளை நீங்கள் அலுவலகம், நிகழ்ச்சிகள் என பல தரப்பட்ட இடங்களுக்கும் கட்டிக்கொண்டு செல்லலாம். இதன் மூலம் கிளாஸியான அழகை பெறுவதோடு, வெப்பத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

News Counter: 
100
Loading...

vinoth