பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் 66 குழந்தைகள் உயிரிழப்பு..!

share on:
Classic

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. 

முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த மாதம் மட்டும் 55 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முசாபர்பூர், கயா உள்ளிட்ட இடங்களில் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. உயிரிழப்பை தடுப்பதற்காகவும் நிலைமையை ஆராய்வதற்காகவும் மத்திய நிபுணர் குழு, பீகாரில் முகாமிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind