'டெஸ்லா' நிறுவனர் எலன் மஸ்கிற்கு சீன குடியுரிமை..

share on:
Classic

புகழ்பெற்ற கார் நிறுவனமான டெஸ்லா(Tesla) வின் நிறுவனர் எலன் மஸ்க் சீனாவில் தனது புதிய கிளையை தொடங்க, அவர் அங்கு தங்குவதற்கு வசதியாக அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது சீன அரசாங்கம்.

போராடி வென்ற 'டெஸ்லா' :

சீனாவின் குடியுரிமை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இப்படியிருக்க அந்நாட்டு அரசே முன் வந்து ஒருவருக்கு குடியுரிமை அளிப்பதும் சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அது எலன் மஸ்க் என்னும் பட்சத்தில் இது எல்லாமே சாத்தியம். மிக சிறிய குடும்பத்தில் பிறந்த 'எலன் மஸ்க்' பல சோதனைகளுக்கு பிறகு தனது நிறுவனமான டெஸ்லாவை தொடங்கினார். ஆரம்பத்தில் தோல்வியடைந்தாலும் பின்பு பல வெற்றிகளுக்கு சொந்தம் கொண்டாடியது அந்நிறுவனம். இப்போது 'டெஸ்லா' உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமாகும்.

டெஸ்லாவின் புதிய கிளை :

இந்நிலையில் தான் தனது புதிய கிளையை சினாவில் ஆரம்பித்துள்ளது 'டெஸ்லா'. இது தான் டெஸ்லாவின் முதல் அயல் நாட்டு கிளை. எனவே இதற்காக எலன் மஸ்க் தொடர்ந்து பல முறை சீனாவிற்கு வருவதும் போவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு  சீனா குடியுரிமையை வழங்கியுள்ளது.

எலனின் ஆசைக்கு ஓகே சொன்ன சீனா :

கடந்த வாரம் சினாவின் குடியரசு தலைவருக்கு நிகரான 'பிரிமியர்' பதவியில் இருக்கும் 'லி கேகுவாங்கை' தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்தார் எலன் மஸ்க். அப்போது அவரிடம் டெஸ்லாவின் எதிர்கால திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த அவர் "எனக்கு சீனாவை மிகவும் பிடித்திருக்கிறது. அடிக்கடி இங்கு வர ஆசை படுகிறேன்" என்று கூறினார். அதற்கு லி "இந்த எண்ணம் உங்களுக்கு உண்மையிலேயே இருந்தால், உங்களுக்கு குடியுரிமை அளிக்க விரும்புகிறோம்" என்று கூறி அவருக்கு குடியுரிமை வழங்க ஆணையிட்டார். 

News Counter: 
100
Loading...

aravind