அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் பணியில் சீனா

Classic

அமெரிக்காவால் வர்த்தகப் போர் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

தலைநகர் பெய்ஜிங்கில் உலக பொருளாதார பேரவையின் நிறுவனர் க்ளௌஸ் ஷ்வாப் , சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வர்த்தப் போர் மற்றும் உலகளாவிய வர்த்தக போட்டியை எதிர்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

கடந்தாண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவை கூட்டத்தில் அதிபர் ஸீ ஜின்பிங் உரை நிகழ்த்தியிருந்தார். அந்த உரையில், சுதந்திரமாக வர்த்தகம் மேள்கொள்வதிலும், முதலீட்டாளர்களை பாதுகாப்பதிலும் சீனா சிறந்த நாடாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே, சீனாவிற்கு தற்போது ஷ்வாப்  வருகை தந்திருப்பதாக கூறப்படுகிறது.
 

News Counter: 
200

Parkavi