டிவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களை மிரட்டும் சீன அரசு

Classic

அரசை விமர்சித்து டிவிட்டரில் கருத்து பதிவிடுபவர்களை சீன அரசு மிரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இண்டெர்நெட் தொடர்புகளை அவ்வபோது துண்டித்து வரும் சீன அரசு அதன் தொடர்ச்சியாக டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்களை மிரட்டி வருகிறது. அரசை விமர்சித்து யாரேனும் கருத்து பதிவிட்டால் அதை நீக்கச் சொல்லி மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலரை காவலில் வைக்கவும் சீன அரசு உத்தரவிடுவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் டிவிட்டர் தடை செய்யப்பட்ட போதிலும், சாப்ட்வேர்களை பயன்படுத்தி 0.4 சதவீதத்தினர் டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பதாக தெரிகிறது.
 

News Counter: 
100
Loading...

youtube