பாடகி சின்மயி பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்... யார் அவர்?

share on:
சின்மயி, பாலியல் புகார், சினிமா, மலிங்கா, Chinmayi, Sexual abuse, Cinema
Classic

கிரிக்கெட் வீரர் மலிங்கா ஐபிஎல் போட்டியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் அளித்துள்ள புகாரை பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்த்தில் பதிவிட்டுள்ளார். 
 
சின்மயி கடந்த சில தினங்களாக பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் என லிஸ்டுகளை அடுக்கிக்கொண்டே போகிறார். 

அந்த வரிசையில்  தற்பொழுது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவும் இணைந்துள்ளார். சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் மலிங்காவால் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ள குற்றச்சாட்டு இது தான். சில வருடங்களுக்கு முன் நான் மும்பையில் இருந்த போது என் தோழியை காணச் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றேன். அந்த அறையில் ஐபிஎல் போட்டியில் விளையாட வந்த மலிங்கா இருந்தார். என் தோழி அங்கு இல்லை. 

சற்றும் எதிர்பாராத நேரத்தில் மலிங்கா என்னை படுக்கையில் தள்ளி என்னை முகத்தில் முத்தமிட்டார். அவர் என்னை விட உயரமாகாவும், வலிமையாகாவும் இருந்ததால் அவரிடமிருந்து என்னால் விடுப்பட முடியவில்லை. நான் என் கண்களையும், வாயையும் இறுக மூடிக்கொண்டேன். 

அந்த நேரத்தில் ஹோட்டல் ஊழியர் கதவை தட்டியதால், மலிங்கா அறையை திறக்க வேண்டியது இருந்து. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு நான் அங்கு இருந்து தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

vijay