கேட்பெரி சாக்லெட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!!

share on:
Classic

73-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கேட்பரி நிறுவனம் புதியதாக வெளியிட்ட சாக்லேட்டின் நிறங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேட்பெரி சாக்லெட் சார்பில் ‘யுனிட்டி பார்’ என்னும் ஒற்றுமைக்கான சாக்லெட் வெளியிடப்பட்டது. 73 ரூபாய் கொண்ட இந்த சாக்லெட் மூன்று நிறங்களை கொண்டது. அதாவது வெள்ளை, பழுப்பு மற்றும் கறுப்பு ஆகிய மூன்று நிறங்களை கொண்டது. இந்த சாக்லெட்டை பார்த்த பலரும் நிறவெறியை காட்டுவதாக அமைந்துள்ளது என பலரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இந்த சாக்லெட்டின் மேல் பகுதியில் வெள்ளை நிறமும், கீழ் பகுதியில் கருப்பு நிறமும் இருப்பது எதன் வெளிபாடு என கேள்விகளையும் கேட்டு கேட்பரி நிறுவனத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan