புத்தகங்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில்...!!!

share on:
Classic

புத்தகங்களை கொண்டு அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ள கிறிஸ்துமஸ் குடில், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அனைவரிடமும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் குடிலை அனைவரும்  ஆர்வமுடன் பார்த்து சென்றனர். 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவர்கள் ஆண்டுதோறும் தங்கள் இல்லங்களில் குடில் அமைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஓவிய ஆசிரியரான சுந்தரராசு  தனது வீட்டில் வித்தியாசமான முறையில் புத்தகங்களை கொண்டு குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்து மதத்தினை பின்பற்றி வரும் ஓவிய ஆசிரியரான சுந்தரராசு ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இதற்கு முன்பு கடந்த 5 ஆண்டுகளா விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி காய்கறிகளைப்  பயன்படுத்தி 1 செமீ அளவிலான கிறிஸ்துமஸ் குடில்களையும், மறு சுழற்சியை வலியுறுத்தி 1000 பிளாஸ்டிக் பாட்டில்களைக்  கொண்ட குடில்களையும், தேங்காய் மற்றும் தென்னை பொருட்களை கொண்ட குடில்களையும், நவதானியங்களை கொண்ட குடில்களையும் செய்து ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில் 6-வது வருடமாக இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் வித்தியாசமான முறையில், புத்தகம் வாசிப்பினை குறித்து மக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனது சுமார்  700 புத்தங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளார். அதில் பாரதியாரின் கவிதைகள், திருக்குறள், பொதுஅறிவு, அரசியல் என பலதரப்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 

மேலும் பொதுமக்கள், மாணவர்கள், செல்போனிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடுவதை தவிர்க்கவும், புத்தக வாசிப்பு மற்றும் புத்தகத்தினை சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வரும் விதமாக இதனை அமைத்துள்ளதாக ஓவிய ஆசிரியரான சுந்தரராசு தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ்குடில்களை செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆசிரியர் சுந்தரராசுவின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது.

News Counter: 
100
Loading...

sankaravadivu